Ad Widget

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் – அரச அதிபர்

வாக்காளர்களது கவனயீனமே வாக்குரிமையை இழக்க காரணம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

voters-day

இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வாக்காளர் தினத்தன்று விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் பதிவை விழிப்பூட்டும் வகையில் யாழ்.மாவட்ட தேர்தல்கள்
திணைக்களத்தால் இன்று காலை விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.

இன்று காலை 9.30 மணியளவில் தபால் நிலையச்சந்தியிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட ஊழியர்கள்,சத்திர சந்தியூடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் பேருந்து நிலையத்தில் வைத்து வாக்காளர் பதிவை தூண்டும் வகையிலான துண்டுப்பிரசுரங்கள்
விநியோகிக்கப்பட்டன.பேரணியின் போது வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உள்ளடக்கிய வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வாக்காளர்கள் தமது பெயரினை பதிவு செய்யாமல் தவறு விடுவதால் வாக்குரிமையை இழக்கும் நிலை
உருவாகின்றது.ஆகவே வருடா வருடம் இந்த வாக்காளர் பேரணியை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு இதனை நினைவுபடுத்தும் விடயமாக இந்த பேரணி இடம்பெறவுள்ளது.

மேலும் வருடா வருடம் ஜீன் 1ம்திகதி இந்த நடவடிக்கை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.ஆகவே வாக்காளர்கள் தமது பெயரினை ஒவ்வெர்ரு வருடமும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வது அவசியம்.

எனவே தமது பெயரினை பதிவு செய்வதற்கான வயது 18. அத்துடன் 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கிராம சேவையாளர்கள் ஊடாக தொடர்பு கொண்டு பெயரினை பதிவு செய்யுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts