வாக்களிப்பு முறை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவும் – சி.வி.கே.சிவஞானம்

c-v-k-sivaganamநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலின் போது வாக்களிக்கும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

‘நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் முறையில் இருந்து மாகாண சபை தேர்தல் வித்தியாசப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களம் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை பொறுத்தவரையில் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மூன்று விருப்பு வாக்குகளை அளிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் ஒரு வேட்பாளருக்கு ஒரு விருப்பு வாக்கு மட்டுமே அளிக்கலாம்.

மாகாண சபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மூன்று விருப்பு வாக்கு இருந்தாலும் வாக்காளர் புள்ளடியிடும் போதும் எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு மயக்கநிலை இருக்கிறது. இது தொடர்பில் தேர்தல் திணைக்களம் மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

‘நாடாளுமன்ற தேர்தல் முறைதான் மாகாணசபைக்கு பொருந்தும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான அறிவூட்டல்களை ஊடகங்களும் தேர்தல் திணைக்களமும் மேற்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts