வாக்களிப்பு தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது தெரிவு செய்த கட்சியின் பெயர் மற்றும் இலக்கத்துக்கு முன்பாக அல்லது சுயேற்சை குழுவின் இலக்கத்தின் முன்பாக (“X”) அடையாளமிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

அதற்கு பிறகு ஏற்றுக்கொண்ட கட்சியின் அல்லது சுயாதீன குழுவின் வேட்பாளர்கள் மூன்று பேரின் இலக்கங்களுடைய சதுரத்தில் (“X”) அடையாளத்தை இட்டு விருப்பு வாக்குகளை வழங்க முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குகள் எண்ணும் போது நிராகரிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பில் தேர்தல் செயலகம் பின்வருமாறு கூறியுள்ளது.

  • எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழுவின் பெயர் அடையாளமிடப்படாமை
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கட்சிக்கும் மேற்பட்டவற்றுக்கு அடையாளமிடுதல்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேட்சை குழுவிற்கு அடையாளமிடுதல்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சி, சுயேட்சை குழு, கட்சி, குழு கூட்டமைப்புகளுக்கு அடையாளமிட்டுருத்தல்
  • வேட்பாளரை அடையாளம் காணும் வகையில் எழுதி அல்லது வரைந்திருத்தல்
  • எந்த கட்சிக்கு, சுயேட்சை குழுவுக்கு வாக்களித்தல் என்பது குறித்த தௌிவின்மை
    போன்ற விடயங்கள் அடையாளம் காணுமிடத்து வாக்குகள் நிராகரிக்கப்படும்.

விருப்பு வாக்குகளை எண்ணும் போது நிராகரித்தல்

  • எவருக்கும் விருப்பு வாக்குகள் வழங்காதிருத்தல்.
  • மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு விருப்பு வாக்குகள் வழங்கியிருத்தல்
  • தௌிவின்றி விருப்பு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றமை அடையாளங்காணப்படல்
    போன்ற காரணங்களால் விருப்பு வாக்குகள் நிராகரிக்கப்படும் என தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Related Posts