வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரியை தடுத்த படையினர்

விசுவமடு பகுதியில் படையினரின் தபால்மூல வாக்களிப்பினை கண்காணிக்கச் சென்ற தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க படையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று காலை ஆரம்பமாகிய தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக விசுவமடு பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு சென்ற தேர்தல் கண்காணிப்பாளர்களை, இதனை கண்காணிக்க நீங்கள் யார்?

உங்களுக்கு யார் அனுமதி தந்தது என கேட்ட படையினர். இராணுவ முகாமுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறி தேர்தலை கண்காணிக்க சென்றவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என அவர்கள் மறுத்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 250 அதிகாரிகள் வட பகுதிக்கு நேற்று முந்தினம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையில் ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்பில் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை தனக்கு காண்பிக்க வேண்டும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.முகாமையாளர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts