வாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்

ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் உரி­மை­யை ­அ­னை­வரும் எவ்­வித தயக்­கமும் இன்றி பயன்­ப­டுத்­த ­வேண்டும். எவரும் தேர்­தலை புறக்­க­ணிக்­கக்­கூ­டாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்தர­ தே­சிக ஞான­சம்­பந்த பர­மாச்­சா­ர்ய சுவா­மிகள் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் அவர்­மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வரின் ஜன­நா­யகக் கட­மை­யாகும். அந்தக் கட­மை­யையும் பொறுப்­பையும் ஒவ்­வொ­ரு­வரும் செய்ய வேண்டும்.

தேர்­தலில் தங்­களின் ஜன­நா­யகக் கட­மை­யான வாக்­க­ளித்தலை கட்­டாயம் நிறை­வேற்ற வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் தங்­களின் வாக்­கு­ரி­மை­யினை பயன்­ப­டுத்த வேண்டும்.

வாக்­க­ளிப்­பது என்­பது நமது புனி­த­மான கட­மை­யாகும். வாக்­க­ளிக்கும் உரி­மை­யை ­அ­னை­வரும் எவ்­வித தயக்­கமும் இன்றி பயன்­ப­டுத்­த­ வேண்டும். தேர்தல் தினத்­தன்று வாக்­கு­ரிமை பெற்ற அனை­வரும் மாலை­நேரம் வரை­ காலம் தாழ்த்தாது நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குகளை பயனுள்ளதாக்க வேண்டும் என்றார்.

Related Posts