வெளிநாட்டு நாணய மாற்றில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாகவே கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகரித்ததே தவிர வற்வரி அதிகரிப்பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர குறிப்பிட்டார்.
மேலும் மே 2 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகரிக்கப்ட்ட 15 சதவீத வற்வரி தாக்கம் செலுத்தாது எனவும் அவர் குறிப்பட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது
நவீன ரக வாகன இறக்குமதியாளர் சங்கம் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன இறக்குமதியாளர் சங்கம் உட்பட்ட பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க ஆகியோரை கடந்த புதன் கிழமை சந்தித்தனர். இதன் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது வாகன இறக்குமதி தொடர்பில் ஏழும் சட்டப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குழு ஒன்று அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது சங்கத்தினால் வற்வரி அதிகரிப்பினால் ஏற்படுத் தாக்கத்தினை குறைப்பதற்கு நிலையான முறைமை ஒன்றை கடைப்பிடிப்பதற்கு பிரேரித்திருந்தோம். குறித்த யோசனையை பரிசீலிப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
அந்த வகையில் மே மாதம் 2 ஆம் திகதி முன்பதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் ஏற்படுத்தப்பட மாட்டாது. ஆனாலும் கடந்த காலங்கிளில் அனைத்து வாகனங்களுக்குமான விலை 300 000 முதல் 400 000 வரையில் அதிகரிப்பு எற்பட்டிருந்தது. இதற்கு காரணம் கடந்த காலத்தில் நாணய மாற்றில் ஏற்பட் தளம்பல் நிலையாகும். தற்போது காணப்படும் பொருளாதார முறைமையினால் வாகன இறக்குமதி துறையில் பாரிய வீழ்ச்சிய ஏற்பட்டிருந்தது.