வாகன விபத்தில் 10 இராணுவ வீரர் காயம்

நெல்லியடி பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் இராணுவத்தின் 19ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த லக்மால் (வயது 20) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய ஒன்பது வீரர்களும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts