வாகன காப்பகம் அமைக்கும் பணிக்கு ஜல்லி கற்கள் சுமந்த குழந்தைகள்!

சட்டபேரவை தலைவர் தனபால், அமைச்சர் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்த நாமக்கல் நகராட்சி வாகன காப்பகத்தின் இறுதிகட்டப் பணியில் குழந்தைகளை பயன்படுத்தியது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Child-work

நாமக்கல்லில் புராதன நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள நேரு பூங்காவில் படகு இல்லம், வாகன நிறுத்துமிடம் மற்றும் இதர புராதன மேம்பாட்டு பணிகள் கடந்த 7ம் தேதி அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை தலைவர் தனபால் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.

தற்போது வாகன காப்பக அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களோடு சுமார் 4 வயது பெண் குழந்தை, 3 வயது ஆண் குழந்தை ஜல்லி கற்களை சுமக்கும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்டபோது, “பள்ளியில் 12ம் தேதி தான் சேர்க்க உள்ளோம். அவர்கள் இங்கு எந்த பணியையும் செய்யவில்லை. சும்மா விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்“ என்றனர். ஆனாலும், நகராட்சி வாகன காப்பக இறுதி கட்டப் பணியில் ஜல்லிக்கற்களை சுமந்து செல்ல குழந்தைகளை அனுமதித்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Posts