வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம்!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனி கிழமைகளிலும், 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், 6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

Related Posts