வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.
அரசாங்கம் அனைத்துப் பொருட்களுக்கும் வரி அறவிடும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே கூறினார்.
வாகன இறக்குமதிகளுக்காக புதிய வரி முறையை அறிமுகப்படுத்தியதன் காரணமாக வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
முச்சக்கர வண்டி முதல் அனைத்து வாகனங்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கூறுகின்றது.