அளவுக்கு அதிகமாக புகையை வெளியேற்றும் வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம்.
வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது.
0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால் முறைப்பாடுகளை வழங்க முடியும்.
வாகனங்களின் புகைப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக புதிய நிறுவனம் முன்வந்திருக்கிறது. தற்சமயம் இரண்டு நிறுவனங்கள் புகைப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன.