வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த சுற்றறிக்கையை தற்போது மீளப்பெறுமாறு அமைச்சரால் பணிக்கப்பட்டுள்ளது.