வவுனியா வளாகம் நடத்தும் தொழிற்சந்தை!

யாழ் பல்கலைக்கழகத்தின், வவுனியா வளாகம் நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் இரு நாட்களும் காலை 9.00 மணிதொடக்கம் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் பிரபலமான 30 இற்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் நேரடியாக பங்குகொண்டுள்ளதுடன், வேலைவாய்ப்புக்களையும் வழங்கவுள்ளன.

அத்துடன் நாளை நடைபெறவிருக்கும் தொழிற்சந்தைக்கான நிகழ்விற்கு வவுனியாவிலிருந்து பம்பைமடுவிற்கு விசேட பேரூந்து சேவைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன என்பதுடன் இலவச தொழில் வழிகாட்டி கருத்தரங்குகள் இரண்டு நாட்களுக்கு இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொழில் தேடி வருபவர்கள் தங்கள் சுய விபரக்கோவையின் பல பிரதிகளை எடுத்து வருமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts