அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டதாக அங்கிருந்து வரும் சில தகவல்களில் தெரிய வருகிறது. எனினும் குறித்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை அறியமுடியவில்லை.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் அச்சிறுமியின் அயல்வீட்டைச் சேரந்த பாலசிங்கம் ஜனார்தன் என்பவராகும். மேலும் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேக நபரை எதிர்வரும் 11.03.2016 வரை போலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.