வவுனியாவில் 33 பேர் சாட்சியமளிப்பு!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது அழைக்கப்பட்டவர்களில் 33 பேர் சாட்சியமளித்தனர்.

நேற்றய தினம் சாட்சியமளிப்பதற்காக 52 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதும் 33 பேரே சாட்சியமளித்தனர்.

நேற்றய சாட்சியங்களில் அதிகளவானவை இராணுவத்திற்கு எதிராகவே பதிவாகின. செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் இருந்து 10 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் சாட்சியமளித்தனர்.

இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசாரணைக்கு 52 பேருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Posts