வவுனியாவில் வித்தியாவின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

viththeya-1st

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டது.

இதேவேளை, ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் ஜெயந்திநாதன் குருக்கள் மற்றும் பிரபாகரக் குருக்கள் உட்பட தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts