வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்!!

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஏல விற்பனையில் இந்த மாம்பழங்களையும், மாலையையும் குறித்த மாணவன் பெற்று கொண்டமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கிராமப்புற ஆலயம் ஒன்றில் பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு ஏலத்தொகை ஆலயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts