வவுனியாவில் ஈ.பி.டி.பி யின் பதாதைகளுக்கு தீ வைப்பு

வவுனியாவில் ஈ.பி.டி.பி.யின் வட்டார தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பதாதைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தெரிவித்தார்.

வவுனியா ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டிருந்த ஈ.பி.டி.பி வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அமைக்கப்படிருந்த பதாதைகளே இவ்வாறு தீ வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை குறித்த வேட்பாளர் அலுவலகத்தை திறப்பதற்காக வந்தபோது சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுவரை நாடுபூராகவும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் 109 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் 90 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, அவர்களில் 89 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts