வவுனியாவில் இளைஞன் மாயம்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குருமன்காடு பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் நேற்றய தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்கள். 077 169 1244/0779302469

Related Posts