வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது.
தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் அவ்வாறான மூன்று வேட்பாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என கூறினார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமின்றி தேர்தல் பிரசாரத்திற்கு இடமளிக்கும் மத வழிபாட்டு தள பொறுப்பாளர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.