தெற்கு அந்தமான் தீவு கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை 5 ஆம் திகதி மேலும் வலுவடைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இலங்கையைச் சுற்றியுள்ள கடல்பகுதி குறிப்பாக வடக்கு, கிழக்கு, மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் இது உணரப்பட வாய்ப்புகள் உள்ளதாகவுமு் வளிமண்டலவியல் திணைக்கள் மேலும் எதிர்வு கூறியிள்ளது.
இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றுமு் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ காணப்படலாம்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம்.
மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசலாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியிலும் நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். எதிர்வரும் 7-ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.