வளலாய் பகுதியில் இறங்குதுறை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில், உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த மார்ச் 13ஆம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வளலாய் பகுதியின் கடற்கரையில் தேங்கியுள்ள கல் மற்றும் மணல் திட்டுக்களை அகற்றி, இறங்கு துறை (வான்) அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சேவாலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனம் இப்பணிகளை நடைமுறைப்படுத்தி வருவதாக திட்ட மேற்பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.

வளலாய் பகுதியில் மூன்று இறங்கு துறைகளும் இடைக்காடு அக்கரை பகுதியில் ஒரு இறங்குதுறையும் யூ.எஸ்.எய்ட் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் கடந்த மாதம் 29ஆம் திகதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கடற்கரையில் காணப்பட்ட பாறைகள், மணல்திட்டுக்கள் என்பன கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றது.

இவ் இறங்குதுறை பணிகள் நிறைவடைந்தால், இப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள 36 மீனவ குடும்பங்கள் நன்மை பெறுவார்கள் என்பதுடன் ஏனைய பகுதிகளில் தற்காலிகமாக மீன்பிடியில் ஈடுபடும் இப்பகுதியில் பூர்வீக மீனவர்கள் மீளக்குடியமர்வர்.

Related Posts