வளலாய் கடற்கரையை அழகுபடுத்த பிரதேச சபை நடவடிக்கை!

அச்சுவேலி வளலாய் அக்கரை கடற்கரையினை அழகுபடுத்துவதற்காக வலி.கிழக்கு பிரதேச சபை ஒரு மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இப்பிரதேச சபையின் நடவடிக்கையின் மூலம் இக்கடற்கரை பிரதேசம் உல்லாசக் கடற்கரை பிரதேசமாக அழகுபடுத்தப்படவுள்ளது.

நாட்டில் நிலவிய அசாதரண நிலை காரணமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரை கடற்கரைப் பகுதி கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இக் கடற்கரையில் சவுக்கு மரங்கள் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல், உல்லாச இருக்கைகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts