வளர்ப்புத் தாயினால் தாக்கப்பட்டு 4 வயது சிறுவன் உயிரிழப்பு?

மட்டக்களப்பு – நாவற்குடா – மாதர் வீதியில் வசித்துவந்த 4 வயது சிறுவன் ஒருவர், தனது வளர்ப்புத் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்புத் தாய் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான குறித்த தாய் நூலகமொன்றில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts