வளங்கள் இல்லையென மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி, கிளிநொச்சி, வேரவில் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் வித்தியாலய முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

school-students

தங்களுக்கான வளங்கள் இல்லையெனவும் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தேவையெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பாடசாலை மாணவர்களுடன் பெற்றோர்களும் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.

உயர்தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், சித்திரம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஆரம்பப் பிரிவுக்கு எந்தவொரு ஆசிரியர்களும் இல்லாத நிலையில் மாணவர்கள், பாடசாலைக்கு சென்று கல்விகற்றாமல் வீடு திரும்புகின்றனர்.

இந்தப் பாடசாலையில் முன்பு கல்வி கற்பித்து வந்த ஆசிரியர்கள் ஆசிரியர் கலாசாலைக்கும், வேறு பாடசாலைகளுக்கும் இடமாற்றம் பெற்றுச் சென்றமையால் ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன் கற்பதற்கு தேவையான வளங்களும் பாடசாலையில் இல்லை. அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விரைந்து நடவடிக்கை எடுக்காதுவிடின் கிளிநொச்சி கல்வி வலய அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எச்சரித்தனர்.

Related Posts