வல்வை நகர சபைத் தலைவர் கோவிட்-19 நோயினால் சாவு!!

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது-76) கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடநிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியை விலகுவதாக அவர் அறிவித்த போதும் தமிழ் அரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts