நெல்சிப் திட்டத்தின் கீழ் 50மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட வல்வெட்டித்துறைச் பொதுசந்தையின் நடவடிக்கைகள் நகர சபையின் உறுப்பினர் கந்தசாமி சதீஸினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் காரணமாக இதுவரை காலமும் சந்தை நடவடிக்ககைகள் தனியார் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கட்டிடப் பணிகள் பூர்தியடைந்தமையினால் தங்களை சந்தைக் கட்டிடத் தொகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி வியாபாரிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து திறப்பு விழா நடத்தப்படுவதற்கு முன்னராகவே, வியாபார நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தை கட்டடிட தொகுதி திறந்துவிடப்பட்டதாக நகர சபையின் உறுப்பினர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சந்தையின் திறப்பு விழா நடத்துவது தொடர்பான தீர்மானம் நகர சபையின் மாதாந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.