வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கைது!

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு சென்று நாடு கடத்தப்பட்ட நபரொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 31 வயதான குறித்த நபர், வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Posts