வல்லை‬ அராலி‬ வீதியில் கட்டுவன்‬ சந்திவரை விடுவிக்க இராணுவம் இணக்கம்

வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திவரை விடுவிக்க சாதகமான முடிவை வழங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

அதிகாரிகளுக்கும் இராணுவத் தரப்பிற்கும் இடையிலான பேச்சுக்களின் ஊடாக இவ்வாறு இணக்கம் காணப்பட்டது. வலி.வடக்கில் 201 எக்கர் கடந்த மாதம் 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திப் பகுதி இந்த விடுவிப்பில் உள்ளடக்கவில்லை. இதற்குப் பதிலாக பொதுமக்களின் தனியார் காணியின் ஊடாக பாதை அமைக்கப்பட்டது.இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தமது காணியை பாதையாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று குறி்பிட்டனர். இந்த விடயங்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன் அதிகாரிகளால் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இதன்போது கட்டுவன் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என்று யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Posts