வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா

மிக இலகுவில் உக்ரைனை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கனவை உக்ரைன் படையினர் தகர்த்து வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதியில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த முன்னேற்றங்களுக்காக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்ய படைகள் முன்னெடுத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்ய படைகள் நடத்திய 85 தாக்குதல்களையும் உக்ரைனிய படைகள் முறியடித்துள்ளனர்.

கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்ஸ்க், அவ்திவ்ஸ்க் ,ஷக்தர்ஸ்க் பகுதிகள், குப்யான்ஸ்க் மற்றும் லைமான்ஸ்க் ஆகிய வடகிழக்கு பகுதிகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலில் பல ராக்கெட் வீச்சுகள் நடந்ததாகவும், அதில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் டெலிகிராமில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts