ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யாழ் இலக்கியக் குவியமும் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-05-2016) மாலை 3.45 க்கு புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மருத்துவர் சோதிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திரு.சித்தாந்தன் ( ஆசிரியர் மறுபாதி சஞ்சிகை) அவர்கள் “இணையத்தில் இலக்கியப்படைப்புகள்” என்னும் தலைப்பிலும், “வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்” என்னும் தலைப்பில் திரு.தங்கராசா தவரூபன் ( நிறுவுனர் Speed IT Net யாழ்ப்பாணம்) அவர்களும் திரு.யாழ்பாவாணன் ( செயலாளர் ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றம்) அவர்கள் “வலைப்பதிவுச் செயல் முறை விளக்கம்” என்னும் தலைப்பிலும் அன்ரன் அருள்வண்ணன் அவர்கள் “தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்” என்னும் தலைப்பிலும் உரையாற்றவுள்ளார்கள்.
இது தவிர அச்சு ஊடகங்களா வலை ஊடகங்களா சிறந்தது? என்னும் கலந்துரையாடல் வருகை தரும் அறிஞர்களால் நடாத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலக்கியப் படைப்பாளிகள், வலைப் பதிவாளர்கள், இலக்கிய நாட்டமுடையோர், வலைப்பக்க நாட்டமுடையோர் , உயர்கல்வி பயிலும் மாணவர்கள், வாசகர்கள் நண்பர்கள் எல்லோரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.