வலி.வடக்கு முகாம்களின் அவலங்களை பார்வையிட்ட ஆஸி மற்றும் நியூஸிலாந்து எம்.பிக்கள்

நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவில் செனட் சபையைச் சேர்ந்த வீ. ரைனோன் மற்றும் நியூஸிலாந்தின் பசுமைக் கட்சி எம்.பியான யான் லொக்கி ஆகியோர் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முகாம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

sajeevan_foreign_mps_001

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் இவருரையும் கொழும்பில் வைத்து இலங்கை அரச அதிகாரிகள் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இவர்கள் வலி.வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளரும் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான எஸ்.சஜீவனுடன் முகாம்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளனர்.

இதன்போது மக்கள், தாம் எதிர்கொண்டு வரும் முகாம் வாழ்க்கையின் பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு, வலி.வடக்கில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts