வலி.வடக்கு மீள்குடியேற்ற விவகாரம்; பிரிட்டனுக்கு மகஜர்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது.

tellippalai-vali-west

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவரும் வலி.வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமாகிய சண்முகலிங்கம் சஜீவனால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும், அக்கிராம மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து, வேறு பிரதேசங்களில் அவர்கள் குடியேற்றப்படுவது குறித்தும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறை சீமெந்து ஆலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால், வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வேலைவாய்ப்பின்றி முகாம்களில் வாழ்வதாகவும் முகாம்களின் காணி உரிமையாளர்களால் முகாம் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts