வலி.வடக்கு மீள்குடியேற்றம் சாத்தியமே இல்லை – கட்டளைத்தளபதி

valy-vadakku-north-tellippalai-armyவலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது,

வலி.வடக்கு மீள்குடியேற்றம், வீடுகள் , ஆலயங்கள் உடைப்பு தொடர்பிலும் அவை நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதன்படி தையிட்டி , மையிலிட்டி போன்ற பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது இனிவரும் காலங்களில் சாத்தியப்படாது என்று கட்டளைத்தளபதி உறுதிபடக் கூறியுள்ளார்.

அத்துடன் விமானநிலையம் விஸ்தரிப்பு இடம்பெறவுள்ளதுடன் பலாலி விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது. எனவே பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் அத்துடன் விமானங்களை நிறுத்துவதற்கான இடமும் வேண்டும் எனவே மக்களை மீள்குடியேற்றம் செய்வது என்பது இனிமேல் ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக நான் பதவியேற்ற நாளில் இருந்து இதுவரை ஒரு கல் கூட வலி.வடக்கில் இராணுவத்தினரால் உடைக்கப்படவில்லை என உதயப்பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும் கட்டடங்கள் எவையும் உடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தவிடயத்தில் நான் மிகக் கவனமாக உள்ளேன்.யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றதில் இருந்து இராணுவத்தினரால் ஒரு கல் கூட உடைக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதாக எதிர்வரும் காலங்களில் பேச்சு இருக்காது என்று கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் மக்களை குடியேற்றுவதற்கு மாற்றீடுகளையே மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என்ற கோரிக்கையினையும் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts