வலி.வடக்கு மீள்குடியமர்வு குறித்து செவ்வாய் முக்கிய கலந்துரையாடல்

palaly-tellipplaiவலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடை பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கலந் துரையாடலில் இராணுவத் தளபதி உள்ளிட்ட பலர் பங்கெடுக்கவுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

வலி.வடக்கில் மக்களின் 6 ஆயிரத்து 300 ஏக்கர் பூர்வீக நிலங்களை இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கெனச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டு, சுவீகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதற்கு எதிராக அந்தப் பகுதி மக்களால் உயர்நீதிமன்றில் 3 ஆயிரம் வழக்குகள் வரை தாக்கல் செய்யப்பட்டிருந்தன. காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்களினால் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தளன. இவ்வாறான தொரு நிலையில், நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

மக்களின் காணிகள் இராணுவத் தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள விடயமும் இந்த மனித உரிமை அமர்வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கும் பிரேரணையில் உள்ளடக்கப்படும் என்று தெரிகின்றது.

இந்தப் பின்னணியில், வலி. வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் கடந்த மாதம் முதல் வாரத் தில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும் வலி.வடக்கு மீள் குடியேற்றக் குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.இதில் நலன்புரி நிலை யங்களில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங் களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக யாழ். மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற வுள்ளது. இதில் வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அறிய முடிகின்றது.

Related Posts