வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதியத் தவறியோருக்கு புதன்கிழமை வரை சந்தர்ப்பம்

tellippalai - army-saraவலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் பதிவு செய்யத் தவறியவர்களை நாளைமறுதினம் புதன்கிழமைக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுக் குழுவினர் கேட்டுள்ளனர்.

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன் கடந்த 5 ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் பிரகாரம் வலி. வடக்கு மக்களின் மீள்குடியமர்வுக்கான உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி மீள்குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்ட கேணல் ஈஸ்வரனுடன் கடந்த வெள்ளிக்கிழமை மீளவும் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதற்கமைய மீள்குடியமர்வு தொடர்பிலான விவரங்களைத் திரட்டுவதற்காக பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இது வரை பதிவு செய்யாதவர்களை நாளை மறுதினம் புதன்கிழமைக்கு முதல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் மற்றும் மருதனார் மடம் பாரதி சனசமூக நிலையம் ஆகிய இடங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts