வலி.வடக்கு பிரதேசத்தை முழுமையாக விடுவிக்க வேண்டும் : மீள்குடியேற்ற குழு

வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்காது ஒரேயடியாக முழுமையாக விடுவிக்கவேண்டுமென வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன் கருத்துதெரிவிக்கையில்-

வலிகாமம் வடக்குப் பகுதியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றது. கடந்த 4 ஆம் திகதி யாழ்.விஜயத்தின் போது வலி.வடக்கின் ஒரு பகுதி விடுவிக்கப்படும் என இடம்பெயர்ந்து துன்பப்படும் மக்கள் நம்பினர் எனினும் ஜனாதிபதியின் வருகை இடம்பெறாததால் காணிவிடுவிப்பு பிற்போடப்பட்டுள்ளது

இந்நிலையில் 16 ஆம் திகதி யாழ்.வரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலைப் பகுதி, மயிலிட்டி கசநோய் வைத்தியசாலை, ஊரணி, தையிட்டி சவக்காலை, கட்டுவன் காணிகள் விடுவிக்கப்படுமெனவும் சொல்லப்படுகிறது.

எனவே பகுதிபகுதியாக விடுவிக்காது முழுமையாக விடுவிக்கவேண்டும். எனவும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாமில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் முகாம் மக்கள் தங்கியுள்ள முகாம் காணிகளை உரிமையாளர்கள் மீளத்தருமாறு கோருகினறனர். கிராம சேவகர் ஊடாகவும் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே வலி.வடக்கு மக்களின் துன்பங்களுக்கு முடிவைக் கொண்டுவர அரசாங்கம் வலி.வடக்கு பகுதியை முழுமையாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.

Related Posts