Ad Widget

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி அகற்றப்படுகிறது?

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

valy-vadakku-north-tellippalai-army

வலி. வடக்கு வசாவிளான், குட்டியபுலம் பகுதியினூடாக செல்லும் உயர் பாதுகாப்பு வலய எல்லை வேலியை நேற்று மாலை திடீரென அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறவில்லை.

யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வலி.வடக்கு பிரதேச மக்கள் மீள் குடியேற்றப்படாமல் அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பாட்டு பிரதேசத்தை சுற்றி உயரமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கபப்டாத பிரதேசமாகக்கப்பட்டு இருந்தது.

அப்பிரதேசத்தில் தம்மை மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி அப்பிரதேச மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் உயர் பாதுகாப்பு வலய எல்லை கம்பி வேலிகள் திடீரென அகற்றப்படத் தொடங்கியிருக்கின்றமை இப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமை பேரவை கூட்ட தொடரில் இம்முறை இலங்கைக்கு எதிராக பலமான பிரேரணை முன்வைக்கப்படுள்ள நேரத்தில் உயர் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றார்.

Related Posts