வலி.வடக்கு நில அபகரிப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இன்று அவசர கலந்துரையாடல்

meetingவலி. வடக்கில் தமிழ் மக்களின் 6381 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் சுவீகரிப்பு செய்வதாக சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பிலான அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் ஆராயப்படவுள்ளது.

இச்சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வலி.வடக்கு பிரதேச சபையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது நில அபகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இச்சந்திப்பில் வலி.வடக்கு பகுதி மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வலி வடக்கு பிரதேச சபை மற்றும் மீள்குடியேற்ற சபை என்பன அறிவித்துள்ளன.

மேலும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts