வலி.வடக்கு, நலன்புரி முகாம் மக்களுக்கு உதவி

konappulam-mallakam-akathi-mukaamவலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் மிகவும் பொருளாதாரத்தில் குறைந்த நிலையில் இருப்பவர்களுள் 104 குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொருட்கள் எதிர்வரும் வாரம் வழங்கப்படவுள்ளதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற சங்கத்தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார்.

முகாம்களில் இருக்கும் குடும்பங்களின் தற்போதைய நிலை குறித்து வலி.வடக்கு மீள்குடியுற்ற சங்கத்தினரால் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உதவியுடன் முதற்கட்டமாக 38 நலன்புரி முகாம்களிலும் உள்ளவர்களில் 104 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வலி.வடக்கு மீள் குடியேற்ற சங்கத்தலைவர் தெரிவிக்கையில், முகாம்களில் பல்வேறுபட்ட பிரச்சிகைகள் காணப்படுகின்றது. அங்குள்ளவர்கள் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கே மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரி இருந்தோம். எமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி எதிர்வரும் வாரம் முதல் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான உதவித்திட்டங்கள் விதவைகள். முதயோர்கள் , ஊனமுற்றவர்கள் , தாய் தந்தையற்ற பிள்ளைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களுக்கும் எதிர்காலத்தில் உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்றார்.

Related Posts