வலி. வடக்கு, கிழக்கு பகுதியில்; மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு

வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலி, வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வலிகாமம் வடக்கில் 868 குடும்பங்களும் வலிகாமம் கிழக்கில் 337 குடும்பங்களும் நிரந்தரமாகக் குடியேறியுள்ளன.

உலர் உணவு விநியோகத்தில் முதல் கட்டமாக இம்மாதம் முதல் 6 வாரங்களுக்கு உலர் உணவுக்கான உறுதிச் சீட்டு (வவுச்சர்) வழங்கப்படவுள்ளது.

அதன் மூலம் அப்பகுதியில் உள்ள பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களில் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளமுடியும் என அவர் மேலும் கூறினார்.

Related Posts