வளலாயில் மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டு அதில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ளும் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகியதை அடுத்து குறித்த திட்டம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
வலி.வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளில் 1000 ஏக்கர் விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வளலாயில் மாதிரிக்கிராமம் ஒன்றும் அமைக்கப்பட்டு மக்களை மீள்குடியர்த்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனினும் குறித்த திட்டத்தையே மகிந்த அரசும் கொண்டுவந்தது. இதனால் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
எனவே குறித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. புதிய அரசு ஆரம்பிக்கப்பட்ட பின்பு 1000 ஏக்கர் விடுவிக்கப்படுவதுடன் மாதிரி கிராமத்திட்டத்தையே கொண்டு வந்தது. இதனால் கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து மீளாய்வு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
எனவே விடுவிக்கப்படவுள்ள 1000 ஏக்கர் காணியும் யார் யாருக்கு சொந்தமானவையோ அவர்களுக்கே வழங்கப்படும். அவ்வாறான திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனவே மீளவும் அமைச்சரவையில் குறித்த பத்திரத்தை மீளவும் சமர்ப்பித்து விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.