வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், வடமாகாண ஆளுநர், முப்படைகளின் தளபதிகள், யாழ் அரச அசதிபர், யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், விடுவிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

வலி.வடக்கில் உள்ள ஜே-233, ஜே-234, ஜே235, ஜே-236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே-241) (ஜே-238) ஆகிய பகுதிகளில் உள்ள 201.3 ஏக்கர் காணிகளே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்பட்டன.

காங்கேசன்துறை பகுதி விடுவிக்கப்படுகின்றமையால் காங்கேசன்துறை புகையிரத நிலையம், மக்கள் பாவனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் செல்லும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மேலும் விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாக ஆராய்வதற்கான, கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபடவுள்ளார்.

1115109538Land

Related Posts