வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் முகாம்கள் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
பலாலி விமான நிலையத்திற்கு அண்மைய காணிகள், வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனை சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி துறைமுகத்திற்கு முன்னாள் உள்ள காணிகள் என்பன விடுவிக்கப்படவுள்ளது.
இக்காணிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தன்று மக்களிடம் கையளிக்கப்படும் என அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் கேட்ட போது தெரிவித்தனர்.
மேலும் அன்றைய தினம் பருத்தித்துறை – பொன்னாலை வீதியும் முழுமையாக பொதுப்பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளது. தற்போது இவ்வீதியூடாக போக்குவரத்து சபை பஸ் மட்டும் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.