வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய சோதனைச் சாவடி நீக்கப்படவுள்ளது!

காங்கேசன்துறை வீதி – மாவிட்டபுரக் கந்தசாமிக் கோவிலுக்கருகில் உள்ள இராணுவச் சோதனைச்சாவடி அங்கிருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவுள்ளது. இதனால் மங்கள் எந்தவொரு கெடுபிடிகளும் இன்றி காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

வலி வடக்கு பாதுகாப்பு வலயலத்தின் இந்தச் சோதனைச்சாவடியானது, காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றின் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்பிரதேசத்திற்கு பயணம் செய்திருந்தபோது 109 ஏக்கர் நிலப்பகுதியை மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

ஆனால், விடுவிக்கப்பட்ட இடங்களில் இராணுவ முகாம்கள் இருந்ததால், மக்கள் தமது காணிகளுக்கோ பாடசாலைகளுக்கோ சென்றுவர இராணுவம் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், தற்போதுதான் விடுவிக்கப்பட்ட இடங்களிலிருந்து இராணுவத்தினர் சிறிது சிறிதாக வெளியேறிவருவதோடு, காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி நுழைவாயிலில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச் சாவடியை விரைவில் அகற்றுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

Related Posts