வலி.வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலங்களை விடுவிக்க கோரி நடைபெற்றுவரும் பேராட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு செய்திகளை சேகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலி.வடக்கில் மக்கள் தமது காணிகளை மீட்க இன்று காலை அடையாள உண்ணாவிரதப் பேராரட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர்.
இந்நிலையில் பொது நலவாய மாநாட்டிற்காக வருகைதந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
குறிப்பாக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் பெரிய சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உண்ணாவிரதப் பேராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை பொலிஸார் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வடபகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தால் அரசாங்க உயர் மட்டத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.