வலி, வடக்கில் 7,061 குடும்பங்கள் மீளக் குடியமர்தப்படாமல் உள்ளனர்

sugirthan_tellippalaiயாழ் மாவட்டம் வலி வடக்கு பிரதேசத்தில்; 7,061 குடும்பங்கள் இன்னமும் மீளக்குடியமர்தப்படாமல் நலன்புரிநிலையங்களில் உறவினர்கள் வீடுகளிலும் வாழந்துவருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இன்னமும் 24 கிராம அலுவலர் பரிவுகளில் 7,061 குடும்பங்களைச் சேர்ந்த 25,328 பேர் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளனர்.

இதில் 288 குடும்பங்கள் தெல்லிப்பழைப்பிரதேச செயலர்பிரிவில் உள்ள 6 நலன்புரி நிலையங்களிலும் ஏனையவர்கள் யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களில் உள்ள நலன்புரி நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த 24 கிராம அலவலர் பிரிவிலும் மூன்று மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் மூன்று மாதங்களை கடந்தும் இந்தப்பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவிவ்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Posts