வலி. வடக்கில் 28.8 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது.

மக்களின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை அடுத்து, வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று 28.8 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலமான வீடுகளையும் கட்டங்களையும் கொண்ட இப்பகுதியானது, தற்போது வெறும் தரைமட்டமாக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் தமது காணிகளை அடையாளம் காண்பதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கிருந்த கிணறுகள் கூட காணாமல் போயுள்ளதாகவும் அனைத்துக் கட்டங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது எனவும், காணிகளுக்குரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts