வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் நேற்றயதினம் காலை கைது செய்யப்பட்டார் என்று காங்கேசன்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
“சந்தேகநபர், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்.
அவர் வெடிமருந்தை எதற்காகக் கொண்டு சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வெடிபொருள்களிலிருந்து அவற்றை சந்தேகநபர் பெற்றுக்கொண்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.