வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளள 460 ஏக்கர் காணியில் காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மத்தி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நலன்புரி நிலையங்களில் வாழும்மக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படவுள்ள காணிகளைப் படைத்தரப்பினர் மக்களை அழைத்துச் சென்று காண்பிக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.
மேலும் மயிலிட்டி மற்றும் விடுவிக்கப்படவள்ள பகுதிகளையும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமைச்சர் மங்கள சமரவீர இன்று நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
மயிலிட்டிச் சந்தி, மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி தெற்கு மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என்று யாழ்ப்பாண இராணுவத்தளபதி கடந்த ஞாயிறு நடந்த மீள்குடியேற்ற குழுவினருடனான சந்திப்பில் உறுதியளித்திருந்தார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் எதிர்வரும் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் நலன்புரி நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அறுவுறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.